Skip to main content
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர் - 46 வயது மேலாளருக்கு 5 மாதச் சிறை

வாசிப்புநேரம் -
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர் - 46 வயது மேலாளருக்கு 5 மாதச் சிறை

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 26 Sep 2026 04:21PM புதுப்பிப்பு : 26 Sep 2026 04:23PM

சிங்கப்பூர் எக்ஸ்போ (Expo) மாநாட்டு அரங்கில் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி மாண்டதால் அவருடைய மேலாளருக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலாளரின் அலட்சியத்தால் ஊழியருக்கு மரணம் ஏற்பட்டதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

சம்பவம் 2023 ஜூனில் நடந்தது.

இந்தியாவைச் சேர்ந்த 46 வயது ராமலிங்கம் குமரேசனும் மாண்ட ஊழியரும் E-Tech Building Services நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.

நிறுவன ஊழியர்கள் எக்ஸ்போ கட்டடத்தின் கூரையில் சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்திக்கொண்டிருந்தனர்.

தகடு ஒன்றைக் கையாளும்போது சேதமடைந்தை கம்பியை ஊழியர் தொட்டார். 

கையுறை அணியாமல் அவ்வாறு செய்தார்.

தகட்டிலிருந்து மின்சாரம் பாய்ந்து ஊழியரைத் தாக்கியது.

ராமலிங்கம் சூரிய சக்தித் தகடுகளை ஒழுங்காகச் சரிபார்க்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

வேலையிடத்தில் அலட்சியமாக நடந்து ஊழியர்களுக்கு ஆபத்து விளைவித்தால் அதிகபட்சம் ஈராண்டுச் சிறை, 50,000 வெள்ளிவரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Others/8World

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்