Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலையும் செய்து லாரியும் ஓட்டும் ஊழியருக்கு 12 மணி நேரம் வேலை - எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

வாசிப்புநேரம் -

வேலை செய்து கொண்டு லாரியும் ஓட்டும் ஊழியருக்கு 12 மணி நேர வேலை என்ற வரம்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அந்தக் கேள்விக்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

இரு வேலைகளைச் செய்யும் ஊழியர்கள் வேலை நியமனச் சட்டத்தின் பகுதி 4இன் கீழ் வகைப்படுத்தப்படுகின்றனர்.

ஓய்வு நாள்கள், வேலை நேரம், வேலை நிபந்தனைகள் ஆகிவற்றுக்கு அடிப்படை வேலை விதிமுறைகள் என்ன என்பதை அந்தச் சட்டம் கூறுகிறது.

எனவே, அவர்களுக்கு நாளொன்றுக்கு 12 மணி நேர வேலை என்ற கட்டுப்பாடு இருக்கிறது. அவர்கள் வேலைக்கு வாகனம் ஓட்டிச் செல்லும் நேரம் அதிலடங்கும்.

அவர்கள் ஓய்வில்லாமல் 6 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்ற விதிமுறையும் உண்டு.

இவ்வாறு 2 வேலை செய்யும் ஒருவர், மீண்டும் லாரி ஓட்டுவதற்கு முன்பாகக் குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும்.

முதலாளிகள் அதனை அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறை வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தில் இருக்கிறது.

ஊழியர்கள் களைப்படைவதை முதலாளிகள் எவ்வாறு தடுக்கலாம் என்ற வழிகாட்டிகளும் உள்ளன.

உதாரணத்துக்கு, லாரி ஓட்டுநருக்கு ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை 15 நிமிடங்கள் ஓய்வு வழங்கலாம்.

லாரி ஓட்டுநர், லாரியை ஓட்டுவதற்கு முன் செய்யும் வேலையின் தன்மை, தீவிரத்தைப் பொறுத்து, அவருக்கான வேலை, ஓய்வு நேரத்தை முதலாளிகள் மாற்றிக்கொடுக்கலாம் என்றும் அமைச்சர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்