Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"அல்ஜூனிட் குழுத்தொகுதியின் ஒரு பகுதி இனி தெம்பனிஸ் குழுத்தொகுதியில்" - மாற்றம் வருத்தமளிப்பதாகக் கூறும் பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்

வாசிப்புநேரம் -
பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம் (Sylvia Lim) அல்ஜூனிட் (Aljunied) குழுத்தொகுதியின் ஒரு பகுதி தெம்பனிஸ் (Tampines) குழுத்தொகுதியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த வட்டாரத்தில் பாட்டாளி கட்சியினர் தங்களது சேவையை ஆற்றிவந்ததை அவர் சுட்டினார்.

எதிர்காலத்தில் அந்த வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்குச் சேவை அளிக்கவும் பாட்டாளி கட்சி விரும்புவதாகத் திருவாட்டி லிம் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகப் பாட்டாளி கட்சியின் ஜெரால்ட் கியாம் (Gerald Giam) அந்த வட்டாரத்தில் உள்ள தனியார் கூட்டுரிமை வீடுகள், புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டையான Tampines GreenGem ஆகியவற்றில் துடிப்பாக ஈடுபட்டிருந்தார்.

புதிய வீடுகளில் உள்ள சில பிரச்சினைகளைக் கையாள்வதிலும் நகர மன்றம் ஈடுபட்டிருந்ததாக திருவாட்டி லிம் கூறினார்.

குடியிருப்பாளர்களை இன்னும் நன்கு புரிந்து கொள்வதற்குக் கடந்த மாதம் தேநீர் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இனி அந்தப் பணிகளைத் தெம்பனிஸ் குழுத்தொகுதிக்குக் கொடுப்பதில் திருவாட்டி லிம் வருத்தம் தெரிவித்தார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்