Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆக்ககரமான எதிர்த்தரப்பு நல்ல பலன் கொடுக்கும் என்பதைக் காட்டியிருக்கிறோம்: பாட்டாளிக் கட்சி

வாசிப்புநேரம் -
ஆக்ககரமான எதிர்க்கட்சியின் மூலம் நல்ல பலன் இருக்கும் என்பதைக் காட்டியிருப்பதாய்ப் பாட்டாளிக் கட்சி அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளது.

ஆயினும் அதன் பணி இன்னும் முடியவில்லை என்றது கட்சி.

சிங்கப்பூருக்குத் தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் அதேபோல் மக்களும் முன்னோக்கிச் செல்லத் தயாராய் இருக்கவேண்டும் என்றும் கட்சி கூறியது.

கட்சியின் முழக்கவரி காலப்போக்கில் மாறியிருக்கலாம் ஆனால் நோக்கத்தில் மாற்றமில்லை என்றது பாட்டாளிக் கட்சி.

வேற்றுமையில் ஒற்றுமைக்குப் பங்களிப்பதைப் பெருமையாகக் கருதுவதாகக் கட்சி சொன்னது.

மக்களின் தொடர் ஆதரவின்றி இது எதுவுமே சாத்தியமில்லை என்று சொன்ன கட்சி, 2020இல் நாடாளுமன்றத்தில் ஆக அதிக எதிர்த்தரப்பு உறுப்பினர்களைக் கொண்டுவர மக்கள் வாக்களித்ததை நினைவுகூர்ந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் அதன் யோசனைகளை அரசாங்கம் செவிமடுத்துச் செயல்படுத்தியதாய்க் கட்சி கூறியது.

சிங்கப்பூர் மக்களின் குரலாக விளங்க விரும்புவதாகவும், உலகத் தரம் வாய்ந்த நாடாளுமன்றத்தை நோக்கிச் செயல்படுவதாகவும் பாட்டாளிக் கட்சி குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் 14ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சி அந்தக் கருத்துகளை வெளியிட்டது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்