Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அடுத்த 3 ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதை எட்டும் ஊழியர்கள் எத்தனை பேர்?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களில் 103,000 பேர் அடுத்த மூவாண்டுகளில் ஓய்வு பெறும் 63 வயதை எட்டுவர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) கூறியுள்ளார்.

மறுவேலை வாய்ப்பு வயதான 68ஐ எட்டுவோர் 73,000 பேர் என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கீத் சுவாவின் (Keith Chua) கேள்விகளுக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

63 வயதை அடைவதற்குள் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஈராண்டுகள் வேலை செய்திருந்தால் அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு மறுவேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று டாக்டர் டான் கூறினார்.

அடுத்த 3 ஆண்டுகளில் 68 வயதை எட்டுவோரில் அனைவரும் வேலையை விடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மை ஆண்டுகளில் 68 வயதுக்கு அருகே இருப்பவர்கள் அல்லது அந்த வயதைத் தாண்டிவிட்டவர்களின் வேலை செய்யும் விகிதம் அதிகரித்திருப்பதாக அவர் சொன்னார்.

70 வயது, அதற்கும் மேற்பட்டோரில் வேலையில் இருப்போரின் விகிதம்:

2022இல்: 21.1%

2017இல்: 15.8 %

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்