Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'ஊழியர்களை அவர்கள் செய்யும் வேலையின் தரத்தைக் கொண்டு மட்டுமே மதிப்பிடவேண்டும்'

வாசிப்புநேரம் -

வேலையிடத்துக்கு வெளியே நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஆதரவு தரும் ஊழியர்களுக்குத் தொல்லை கொடுப்பதோ, அவர்களைத் தண்டிப்பதோ கூடாது;

வேலையின் தரத்தைக் கொண்டே ஓர் ஊழியரின் திறனும் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் மதிப்பிடப்படவேண்டும்;

நியாயமான வேலை நடைமுறைகளின்கீழ் இவற்றை விளக்கும் வழிகாட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

அவை அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து நடப்புக்கு வரும். 

அதே சமயம், வேலைக்குத் தொடர்பில்லாத நிகழ்வுகளில் ஊழியரைக் கலந்துகொள்ளும்படி வற்புறுத்தவும் கூடாது என்று வழிகாட்டி கூறுகிறது. 

சிங்கப்பூர் பல்லின பல கலாசாரங்கள் கொண்ட நாடு; ஒருவரின் தனிப்பட்ட கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதையும் வழிகாட்டி வலியுறுத்தும். 


ஊழியர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தயக்கமின்றி முன்வைக்கக்கூடிய சூழல் வேலையிடத்தில் நிலவவேண்டும் என்றும் வழிகாட்டி கூறுகிறது. 

வழிகாட்டிகளைப் பின்பற்றத் தவறும் முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் மீட்டுக்கொள்ளப்படும். 

சட்டப்பிரிவு 377A குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, மாற்றுக்கருத்து கொண்ட ஊழியர்கள் வேலையிடத்தில் வித்தியாசமாக நடத்தப்படுவது குறித்த விவாதம் எழுந்தது. 

வேலையிடம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்; அங்கு பேதங்கள் இருக்கக்கூடாது என்பதைச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது வலியுறுத்தினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்