Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேலையிடக் காயங்களைக் குறைத்துக் காட்டும் சம்பவங்கள் குறைவாகவே உள்ளன: அமைச்சர் டான் சீ லெங்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வேலையிடத்தில் ஏற்படும் காயங்களைக் குறைத்துக் காட்டும் சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவாகவே இருந்ததாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார். ஆண்டுதோறும் அப்படிப்பட்ட சுமார் 30 சம்பவங்கள் மட்டுமே பதிவாயின. 

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டம், காய இழப்பீட்டுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் முதலாளிகள் வேலையிடக் காயங்களை மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும். வேலையிடக் காயங்கள் குறித்துப் புகார் செய்யப்படவில்லை என சந்தேகிக்கும் ஊழியர்கள் நேரடியாக மனிதவள அமைச்சிடம் தெரிவிக்கலாம். 

நாடாளுமன்ற உறுப்பினர் ஹெ டிங் ரூ (He Ting Ru) கேட்ட கேள்விகளுக்கு டாக்டர் டான் எழுத்துவடிவில் பதிலளித்தார்.

முதல்முறை வேலையிடக் காயங்களைத் தெரிவிக்காதவர்கள் $10,000 அபராதம் செலுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்கு $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். 

எத்தனை புகார்கள் அளிக்கப்படுகின்றன என்பதை மனிதவள அமைச்சு அணுக்கமாகக் கண்காணிப்பதாய் டாக்டர் டான் தெரிவித்தார். 

மேலும் செய்திகள் கட்டுரைகள்