Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் தீமா கால்வாயை மேம்படுத்தும் பணி ஈராண்டு வரை தாமதிக்கப்படும்

வாசிப்புநேரம் -
புக்கிட் தீமா கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணி 2026ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட ஈராண்டு தாமதிக்கப்படும்.

புக்கிட் தீமா-ரோச்சோர் பசுமைத் தாழ்வாரப் பணிகளோடு இணைந்து மேற்கொள்ள வசதியாக, அந்தப் பணி தாமதிக்கப்படுகிறது.

அவ்வாறு செய்வதன்மூலம், போக்குவரத்து நீண்டகாலத்துக்குத் திருப்பிவிடப்படுவதைத் தவிர்க்கமுடியும். அதன்மூலம் குடியிருப்பாளர்கள் வாகனமோட்டிகள், வர்த்தக உரிமையாளர்கள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கமுடியும்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணி முடிவடையும்போது அதனால் 30 விழுக்காடு கூடுதலான மழைநீரை எடுத்துச் சென்று வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கமுடியும்.

பருவநிலை மாற்றத்தால் மழை, வெள்ளம் போன்றவை கடுமையாகி வருகின்றன.

ஒவ்வொரு முறையும் கனத்த மழை பெய்யும்போது அதற்கேற்ப வடிகால்களை ஆழப்படுத்தி அகலப்படுத்துவது சாத்தியமல்ல என்றார் திருவாட்டி ஃபூ.

அதற்கு அதிகச் செலவு பிடிப்பதோடு ஏராளமான நிலமும் தேவைப்படும் என்பதை அவர் சுட்டினார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்