Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உலக நீர் விளையாட்டுப் போட்டி... ஏற்பாடுகள் தொடக்கம்...

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு உலக நீர் விளையாட்டுப் போட்டி நடைபெறவிருக்கிறது.

அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

காலாங் வட்டாரத்தில் தற்காலிக நீச்சல் கூடம் அமைக்கப்படுகிறது.

அது அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் சுமார் 4,800 பேர் அமரக்கூடிய வசதி இருக்கும்..  2 நீச்சல் குளங்கள்... சமூக நிகழ்ச்சிகளுக்கான இடங்களும் இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

உலக நீர் விளையாட்டுப் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெறும்.

அதற்கு முன்பாக ஜூன் மாதத்தில் தென்கிழக்காசிய நீச்சல் வெற்றியாளர் போட்டியும் புதிய நீச்சல் கூடத்தில் நடத்தப்படும்.

புதிய கூடத்தின் வசதிகளைச் சோதனை செய்வதற்கு அது உதவும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

உலக நீர் விளையாட்டுப் போட்டியின் சில அங்கங்கள் விளையாட்டு நடுவத்தின் OCBC Aquatic Centre நிலையம்,  Leisure Park Kallang mall கடைத்தொகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்படும் தற்காலிக நீச்சல்குளங்கள், செந்தோசா ஆகியவற்றிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்