Skip to main content
சிங்கப்பூரில் உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்று
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்று

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்று

படம்: CNA/Jeremy Long

சிங்கப்பூரில் சதுரங்க விளையாட்டுக்கான ஆர்வம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்றில் அனைத்துலகச் சதுரங்கப் போட்டியாளர்கள் தற்போது Resorts World Sentosaவில் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

போட்டியைக் காண நூற்றுக்கணக்கானோர் அவ்விடத்திற்கே சென்றாலும், அடித்தள நிலைகளிலும் ஆர்வம் கூடியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சில உள்ளூர் சதுரங்க விளையாட்டு மன்றங்களில் சேர்ந்திருப்போரின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.

உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் 32 வயது டிங் லிரன் (Ding Liren) தமது வெற்றியைத் தற்காத்துக்கொள்ள இந்தியாவின் 18 வயது குகேஷ் தொம்மராஜூவை (Gukesh Dommaraju) எதிர்த்து விளையாடுகிறார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்