Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

நீரிழிவு நோய் உள்ளது..அருகில் லட்டு உள்ளது...ஆசையை அடக்குவது எப்படி?

வாசிப்புநேரம் -

நீரிழிவு நோய் உள்ளது...

அருகில் தட்டு நிறைய லட்டுகள் உள்ளன...

லட்டை ருசித்துப் பார்க்க ஆசை...

'பாதி லட்டு சாப்பிட்டால் பரவாயில்லை தானே?' என்ற எண்ணம் வரும்போது என்ன செய்வது?

Pixabay

நீரிழிவு நோய் இருந்தாலும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் இனிப்புப் பொருள்களைக் குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இன்று உலக நீரிழிவு தினம். 

உலகில் 500 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் இனிப்பு நீரால் அவதியுறுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் இனிப்புப் பொருள்களை முற்றிலும் ஒதுக்கத் தேவையில்லை...

"நீரிழிவு நோய் உள்ளவர்கள் நாளொன்றுக்கு 10 கிராம் சர்க்கரை வரை உட்கொள்ளமுடியும். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் நார்ச்சத்து, புரதச்சத்து அடங்கிய உணவுடன் சிறிது அளவு இனிப்பையும் சேர்த்துச் சாப்பிடலாம்,"

என்று The HealthSuttra நிறுவனத்தின் உணவியல் வல்லுநர் ஷீட்டல் சோமையா சொன்னார்.

ஆனால் எவ்வளவு இனிப்பைச் சாப்பிட்டால் பாதகமில்லை?

pixabay

ரத்தத்தின் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் The Nutrition Clinic-இன் நிறுவனர் பூஜா சொன்னார்.

"Glucose Monitor Device எனும் கருவியைக் கொண்டு கண்காணித்தால் எந்த உணவு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறியலாம். அதன் அடிப்படையில் செயல்படலாம்" என்று அவர் கூறினார்.

நிபுணர்கள் அளித்த பொதுவான குறிப்புகள் இதோ...

எவ்வளவு இனிப்பைச் சாப்பிட்டால் பாதகமில்லை?

பழங்கள் - அன்றாடம் மொத்தம் 2 பழங்களை வெவ்வேறு நேரங்களில் சாப்பிடலாம். குறிப்பாக...கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) குறைவாக உள்ள பழங்கள்.

உதாரணம்: ஆப்பிள், ஆரஞ்சு, பீச், பிளம், பேரிக்காய் (apple, orange, peach, plum, pear) 

சாக்லேட் - டார்க் சாக்லேட்டைத் தேர்ந்தெடுங்கள்.

லட்டு - ஒரு வெள்ளி நாணய அளவில் உள்ள லட்டைச் சாப்பிடலாம்

ஜாங்கிரி - நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொண்ட பிறகு அரை ஜாங்கிரியைச் சாப்பிடலாம்.

பொங்கல்/ பாயசம் -  அவற்றைத் தானியங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யலாம்.

சுருக்கமாகப் பார்க்க

ஆசைகளை எப்படி அடக்குவது?

- 7 நாள்களுக்கு எதிலும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருக்கலாம். அது இனிப்புப் பொருள்களுக்கு ஆசைப்படுவதைக் குறைக்க உதவும்.

- சிறிது அளவு இனிப்பில் திருப்தி அடையப் பழகலாம். 

- நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தை விடலாம்.

- அன்றாடம் உடற்பயிற்சி செய்யலாம்.

- இனிப்பைச் சாப்பிடுவதற்கு வாரத்தில் இரண்டு நாள்களை ஒதுக்கலாம். அந்த நடைமுறையைப் பின்பற்றலாம்.

Pixabay

"இதைத் தவிர்ப்பது, அதைத் தவிர்ப்பது என்ற அணுகுமுறையைப் பின்பற்றாமல் முதலில் உணவில் எதைச் சேர்க்கலாம் என்பது மீது கவனம் செலுத்தலாம்,"

என்று பூஜா கூறினார்.

உணவில் போதுமான புரதச்சத்தையும் நார்ச்சத்தையும் சேர்ப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தமுடியும். இனிப்புப் பொருள்களைச் சாப்பிடுவதற்கான ஆர்வத்தையும் கட்டுப்படுத்தமுடியும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்