சிங்கப்பூரில் இதுவரை கண்டிராத 40 மீட்டர் உயர டைனோசார் எலும்புக்கூடு
வாசிப்புநேரம் -
படம்: Gondwana Studios Pty Ltd
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் இதுவரை கண்டிராத 40 மீட்டர் உயரமுடைய டைனோசார் எலும்புக்கூட்டின் மாதிரியைப் விரைவில் பொதுமக்கள் காணலாம்.
அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தொடங்கவிருக்கும் "DINOSAURS, EXTINCTIONS, US" எனும் பிரம்மாண்டக் கண்காட்சியின் ஓர் அங்கமாக அது இடம்பெறவிருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற Dinosaurs of Patagonia, Six Extinctions ஆகிய இரு கண்காட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் அது அமைந்திருக்கும்.
சுமார் 3,000 சதுர அடி பரப்பளவில் அமையவிருக்கும் கண்காட்சியில் பூமியின் 400 மில்லியன் வருட வரலாற்றைக் கண்ணெதிரே கொண்டுவரும் அம்சங்கள் இருக்கும்.
30க்கும் மேற்பட்ட அரிய படிமங்கள், 60 டைனோசார்களின் மாதிரி வடிவங்கள் என ஆதிகால விலங்குகளைப் பற்றிய வரலாற்றைப் பிரதிபலிக்கும் காட்சிகளைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூர் அறிவியல் நிலையமும் Lee Kong Chian
Natural History அரும்பொருளகமும் இணைந்து ஏற்பாடு செய்யும் கண்காட்சியின் நுழைவுச்சீட்டுகள் வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து விற்பனைக்கு வரும்.

ஆதாரம் : Others