Skip to main content
NUS 8ஆவது இடம், NTU 12ஆவது இடம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

NUS 8ஆவது இடம், NTU 12ஆவது இடம்

வாசிப்புநேரம் -
NUS 8ஆவது இடம், NTU 12ஆவது இடம்

(கோப்புப் படம்: AFP/Catherine Lai)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 19 Jun 2025 06:48PM புதுப்பிப்பு : 19 Jun 2025 07:46PM
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் (NUS), உலகப் பல்கலைக்கழகத் தரநிலைப் பட்டியலில் 8ஆவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

QS உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் வந்த ஒரே ஆசியப் பல்கலைக்கழகமாகவும் அது இருக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லந்து ஆகிய நாடுகளின் பல்கலைகளும் முதல் 10 இடங்களைப் பிடித்தன.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU) மூன்று இடங்கள் முன்னேறி இம்முறை 12ஆவது இடத்தைப் பிடித்தது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் 74 நிலைகள் முன்னேறி 511ஆவது இடத்தைக் கைப்பற்றியது.

ஆய்வு ,வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.

அண்மையில் அமெரிக்கக் கல்வி நிலையங்களுக்கான ஆய்வு நிதி குறைக்கப்பட்டதால் எதிர்காலத்தில் தரநிலையைப் பாதிக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆய்வு நிதிக் குறைப்பு அமெரிக்காவிற்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்