Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிங்கப்பூரில் அன்றாடப் பயன்பாட்டில் தண்ணீரை மிச்சப்படுத்த சில வழிகள்...

வாசிப்புநேரம் -

இன்று உலகத் தண்ணீர் தினம்.

சிங்கப்பூரில் இயற்கைவளங்கள் குறைவு. குறிப்பாக நீர்வளங்கள் மிகக் குறைவாக இருக்கின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

  • சிங்கப்பூரில் தினமும் சராசரியாக 1.63 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்று பொதுப் பயனீட்டுக் கழகம் வெளியிட்ட ஆக அண்மை நிலவரம் குறிக்கிறது.
  • அது 782 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்குச் சமமானது!
சிங்கப்பூருக்கான தண்ணீர் எங்கிருந்து வருகிறது?
  • உள்ளூர் நீர்த்தேக்கங்கள்
  • வெளிநாட்டு இறக்குமதி
  • உயர்தர நீர்ச் சுத்திகரிப்பு (NEWater)
  • உப்பு அகற்றப்பட்ட கடல்நீர் (Desalinated Water)
எதிர்காலத்தில்....
2065ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் தண்ணீர் பயன்பாடு இரட்டிப்பாகும் என்று முன்னுரைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இலக்கு?

🚰  2021 நிலவரப்படி, சிங்கப்பூரில் சராசரியாக ஆளுக்கு 160 லிட்டர்வரை தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.

🚰  2030க்குள் பயன்பாட்டை 130 லிட்டருக்குக் குறைக்கவேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்கு.

🚰  அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொருவரும் பயன்படுத்தும் தண்ணீரின் அளவைக் குறைக்கவேண்டும்.

தண்ணீரைச் சேமிப்பதுகுறித்து எரிசக்தி நிபுணர், இயற்கை ஆர்வலர் திரு. வெங்கட்ராமனிடம் பேசியது 'செய்தி'.
சிங்கப்பூர்ச் சூழலுக்கேற்பத் தண்ணீரை எவ்வாறு சேமிக்கலாம், வீணாக்காமல் இருக்கலாம்?

💧  குழாயை அடைத்துவிடுங்கள்

பல் துலக்கும்போதும் குளிக்கையில் உடலில் சவர்க்காரம் பூசும்போதும் தட்டுகளைக் கழுவும்போதும் குழாயிலிருந்து ஓடும் நீர் வீணாகிறது.

அதுபோன்ற நேரங்களில் குழாயை அடைத்து, பின்னர் தேவைப்படும்போது மீண்டும் திறந்துவைக்கலாம்.

💧  தண்ணீரையும் மறுசுழற்சி செய்யலாம்!

உதாரணம்: காய்கறிகளைக் கழுவும்போது, அதற்கான தண்ணீரைப் பாத்திரத்தில் சேமித்து அதைச் செடிகளுக்கு ஊற்றலாம்.

💧  குளிக்கும் நேரத்தைக் குறைத்துவிடலாம்

சிலர் நீண்ட நேரம் குளிக்கின்றனர். அந்நேரத்தில் குழாய் திறந்திருந்தால் தண்ணீர் வீணாகும்.

குழாயை அடைத்துவிடுவது அல்லது குளிக்கும் நேரத்தைச் சற்றுக் குறைத்துக்கொள்வது நல்லது.

💧  சலவை இயந்திரத்தின் தரம்

Ticks எனும் குறியீட்டுமுறை பல மின்சாதனங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. 4, 5 tick குறியீடுகள் இருக்கும் சலவை இயந்திரங்கள் தண்ணீரையும் மின்சாரத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்தும் (energy, water efficient).

💧  சலவை இயந்திரத்தை முழுமையாகத் திறம்படப் பயன்படுத்தலாம்

உதாரணம்: சலவை இயந்திரத்தில் 5 கிலோகிராம் துணிவரை வைக்கலாம் என்றால் அதில் கிட்டத்தட்ட அந்த அளவுக்குத் துணிகளைப் போட்டுத் துவைக்கவைப்பது சிறப்பு.

மிகக் குறைவான அளவில் துணிகளைச் சலவை செய்வதால் தேவையின்றித் தண்ணீர் வீணாகும்.

மனிதர்களும் மற்ற உயிரினங்களும் உயிர்வாழ்வதற்குச் சுத்தமான தண்ணீர் மிகவும் முக்கியம்.

சிங்கப்பூரில் தண்ணீர் "எளிதில்" கிடைக்கும் என்று அலட்சியமாக இருக்காமல், தண்ணீரை வீணாக்காமல் சரியான அளவில் பயன்படுத்துவது முக்கியம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்