Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில், பேருந்துப் பணிமனை... 2026ஆம் ஆண்டுக்குள் தயார்...

வாசிப்புநேரம் -

உலகின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில், பேருந்துப் பணிமனை 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்குக் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. 

ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையில் ரயில் பராமரிப்புக்கு மூன்று நிலையங்களும் பேருந்துக்கு ஒரு நிலையமும் இருக்கும். 

அடுத்த ஈராண்டில் தற்போதுள்ள சாங்கி பணிமனைக்குப் பதிலாக அது செயல்படும்.  

பணிமனைகள் ஒருங்கிணைக்கப்படுவதால் 44 ஹெக்டர் நிலப்பரப்பு மிச்சமாகிறது. சுமார் 60 காற்பந்துத் திடல்களின் அளவு அது. 

அதில் ஏறக்குறைய 220 ரயில்களும் சுமார் 700 பேருந்துகளும் நிறுத்தப்படலாம். 

பணிமனையில் பசுமை அம்சங்களும் இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 84 டன் கரியமில வாயுவை நீக்கும் ஆற்றல் கொண்ட பசுமைக் கூரைகள் அங்குப் பொருத்தப்படும். 

பணிமனையை ரயில் தடத்தோடு இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அடுத்த மாதம் 7ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை ரயில் சேவைகள் இருக்கமாட்டா. 

அந்தக் காலக்கட்டத்தில் இரண்டு நிலையங்களுக்கு இடையிலும் இணைப்புப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படும். 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்