Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"Worldskills 2022" போட்டியில் சிங்கப்பூர் புதிய சாதனை....பதக்கங்களை அள்ளிக்குவித்த இளம் நட்சத்திரங்கள்

வாசிப்புநேரம் -
"WorldSkills Competition 2022" எனும் உலகத் திறனாளர் போட்டியில் சிங்கப்பூர் அணி புதிய சாதனை படைத்திருக்கிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்ற போட்டியில் 29 திறமை வாய்ந்த இளையர்கள் அடங்கிய குழு பங்கேற்றது.

அவர்கள் பல பதக்கங்களை வென்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தனர்.

இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் கண்ட கூட்டுப் பொருள் உற்பத்திப் பிரிவில் (Additive Manufacturing) சிங்கப்பூருக்கு கிடைத்த தங்கப் பதக்கம் அதில் முத்தாய்ப்பாய் அமைந்தது.

அந்தப் பிரிவில் உலகளவில் முதல் தங்கத்தைக் கைப்பற்றியப் பெருமை சிங்கப்பூரைச் சேரும்.

ஹோட்டல் வரவேற்பு, நீர் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளிலும் சிங்கப்பூர் முதல்முறையாகத் தங்கப் பதக்கங்கள் வென்றது.

விமானப் பராமரிப்பு, ரசாயன ஆய்வகத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளிலும் சிங்கப்பூர் முதல்முறையாகப் பதக்கங்களைக் கைப்பற்றியது.

மொத்தமாக 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் மேன்மைக்கான 13 பதக்கங்களையும் சிங்கப்பூர் வென்று வாகை சூடியது.

இதன் வழி 55 நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற போட்டியில் சிங்கப்பூர் 9ஆவது இடத்தைப் பிடித்தது.

முன்னதாக "WorldSkills Shanghai 2022" என்ற பெயரில் நடைபெறவிருந்த இந்தப் போட்டி COVID-19 பெருந்தொற்றுக் காரணமாக ரத்தானது.

அதையடுத்து இவ்வாண்டு "WorldSkills competition" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிறப்புப் பதிப்பாக இப்போட்டி 15 நாடுகளில் நடத்தப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்