மூன்றில் ஒரு தொகுதிக்கும் குறைவாகவே போட்டியிடுவோம் - பாட்டாளிக் கட்சி

(படம்: CNA/Jeremy Long)
வரும் பொதுத்தேர்தலில் 97 நாடாளுமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாகவே போட்டியிடப் போவதாகப் பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் (Pritam Singh) இன்று (17 ஏப்ரல்) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரத்தை வெளியிட்டார்.
நாடாளுமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றுவதை இலக்காக வைத்துள்ளதாகக் கட்சி முன்பு கூறியிருந்தது.
"அது எங்களுடைய இலக்குகளில் ஒன்று. அதைவிடப் பெரிய இலக்கு சிங்கப்பூரின் நலனை மனத்தில் வைத்துச் சேவையாற்றக் கூடியவர்களைப் பணியமர்த்துவது," என்று திரு பிரித்தம் சிங் கூறினார்.
கட்சியின் சார்பில் மொத்தம் எத்தனை பேர் தேர்தலில் போட்டியிடுவர் என்பது பற்றி அவர் விவரம் தரவில்லை.
2020ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் பாட்டாளிக் கட்சி சார்பாக 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
2015ஆம் ஆண்டில் 28 போட்டியிட்டனர்.