Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்கச் சேவை ஊழியர்களுக்கு 1.1 மாத ஆண்டிறுதி போனஸ் கிடைக்கவுள்ளது

வாசிப்புநேரம் -
அரசாங்கச் சேவை ஊழியர்களுக்கு 1.1 மாத ஆண்டிறுதி போனஸ் கிடைக்கவுள்ளது

படம்: AFP/Roslan RAHMAN

அரசாங்கச் சேவை ஊழியர்களுக்கு ஆண்டிறுதி போனஸாக 1.1 மாதச் சம்பளம் கிடைக்கவிருக்கிறது. 

MX15-நிலை அல்லது அதற்கும் குறைந்த நிலையில் இருக்கும் இளம் அதிகாரிகள், கூடுதலாக ஒரே தவணைக்கு மட்டும் 700 வெள்ளியைப் பெறுவர்.

பொதுத்துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு, அரசாங்கம் அந்த முடிவை எடுத்தது. 

பொதுத்துறை அதிகாரிகளின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் அதே வேளையில் பொருளியல் சூழலையும் அரசாங்கம் கவனத்தில்கொண்டு போனஸை அறிவித்துள்ளது. 

அரசாங்கச் சேவை ஊழியர்கள் அனைவருக்கும் 13ஆவது மாதச் சம்பளமும் தொடர்ந்து வழங்கப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa