Yishun 10 மூடப்படுகிறது
வாசிப்புநேரம் -
(படம்: Frasers Property)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Yishun 10 திரையரங்கு அடுத்த ஆண்டு (2027) மார்ச் 2ஆம் தேதி மூடப்படுகிறது.
மறுமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று Frasers Property நிறுவனம் தெரிவித்தது.
110 வீடுகள் கொண்ட குடியிருப்புக் கட்டடமும் கீழ் மாடியில் கடைத்தொகுதியும் கட்டப்படும்.
கட்டுமானப் பணிகள் 2031ஆம் ஆண்டு பாதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வீடுகளின் விற்பனை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் தொடங்கும்.
சுமார் 10 ஆண்டுகளில் யீஷூனின் மத்திய பகுதியில் புதிய வீட்டு விற்பனை வருவது இதுவே முதல்முறை என்று Frasers Property கூறியது.
அது யீஷூன் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது.
1992ஆம் ஆண்டு மே மாதம் Yishun 10 திறக்கப்பட்டது.
ஒரே கட்டடத்தில் 10 திரையரங்குகள் கொண்ட அதுவே சிங்கப்பூரின் முதல் பன்மாடத் திரையரங்கு (multiplex).
1993ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 3 மில்லியன் பேர் அங்குச் சென்றனர்.
சென்ற ஆண்டு Frasers Property நிறுவனம் Yishun 10-ஐ வாங்கியது.

ஆதாரம் : CNA