Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காற்பந்து, பேட்மிண்ட்டன் அணிகள் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிறப்பாகச் செய்யவில்லை

வாசிப்புநேரம் -
காற்பந்து, பேட்மிண்ட்டன் அணிகள் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிறப்பாகச் செய்யவில்லை
படம்: CNA/Jeremy Long
சிங்கப்பூரின் 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் காற்பந்து அணி, திடலிலும் அதற்கு வெளியிலும் மோசமாகச் செயல்பட்டதாக சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் கூறியுள்ளது.

அணியில் சில குறைபாடுகள் இருப்பதாக அது சொன்னது.

Young Lions அணி முதலில் தென்கிழக்காசிய விளையாட்டுகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தது.

மேல்முறையீட்டிற்குப் பிறகு தாய்லந்து சென்ற அணி, குழுச் சுற்றிலேயே போட்டியிலிருந்து வெளியேறியது.

திமோர் லெஸ்ட்டேயிடமும் (Timor Leste) தாய்லந்திடமும் அது தோல்வியைச் சந்தித்தது.

ஆட்டத்திற்குப் பிறகு, அரங்கில் திரண்டிருந்த சுமார் 500 சிங்கப்பூரர்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வெளியே சென்றதாக மன்றத்தின் தலைமைச் செயலாளர் மார்க் சே (Mark Chay) கூறினார்.

தோல்வியுற்றதில் சிங்கப்பூர் அணிக்கு வருத்தம் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், விளையாட்டாளர்கள் அவர்களின் அணுகுமுறையைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் விளையாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே பேட்மிண்ட்டன் அணி இம்முறை தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிறப்பாகச் செய்யாதது குறித்து ஆய்வு நடப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்