Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நடைபாதையில் குவிந்திருக்கும் பொருள்கள், அக்கம்பக்க இரைச்சல்- இத்தகைய பிரச்சினைகளுக்கு இளையர்கள் யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம்

வாசிப்புநேரம் -
நடைபாதையில் குவிந்திருக்கும் பொருள்கள், அக்கம்பக்க இரைச்சல்- இத்தகைய பிரச்சினைகளுக்கு இளையர்கள் யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம்

(படம்:Ministry of National Development)

இளையர்கள் நகராண்மைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காணும் யோசனைகளைச் சமர்ப்பிக்கும்படி நகராண்மைச் சேவைகள் அலுவலகமும் தேசிய இளையர் மன்றமும் அழைப்பு விடுத்திருக்கின்றன.

நடைபாதையில் பொருள்களைக் குவித்து வைப்பது, அக்கம்பக்க இரைச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு
15 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளையர்கள் தீர்வுகளைச் சமர்ப்பிக்கலாம்.

திட்டங்களைச் சோதித்து பார்க்க 10,000 வெள்ளி வரையிலான நிதியுதவியும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்று அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

இளையர்கள், குழு அமைத்து யோசனைகளைச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். தனிநபராகவும் அவற்றைச் சமர்பிக்கலாம். பதிவுக்கான இறுதிநாள் ஜூலை 2ஆம் தேதி, 2023.

அமைப்புகளின் முயற்சி 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இப்போது வரை 30 திட்டக் குழுக்களுக்கு மொத்தம் 275,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
 
ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்