Skip to main content
இளையர்கள் தொண்டூழியம் புரிய 3000 வாய்ப்புகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இளையர்கள் தொண்டூழியம் புரிய 3000 வாய்ப்புகள்- புதிய ஒப்பந்தம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிய ஒப்பந்தத்தின் மூலம் 3000 தொண்டூழிய வாய்ப்புகள் உருவாகவிருக்கின்றன.

தேசிய இளையர் படையும், கரையோரப் பூந்தோட்டங்களும் மூவாண்டுக்குச் சேர்ந்து செயல்பட ஒப்பந்தம் செய்தன.

சிங்கப்பூர் 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நேரத்தில் நாட்டுக்கு எப்படிச் சேவையாற்றலாம் என்று இளையர்களைச் சிந்திக்கத் தூண்டுவது நோக்கம்.

அதற்குரிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

தேசிய இளையர் மன்றத்தின் மன்ற உறுப்பினரும், சுகாதாரத் துணையமைச்சருமான திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுவருவதே இளையர்கள் ஆற்றக்கூடிய பெரும்பணி என்றார்.

தேசிய இளையர் படை, கரையோரப் பூந்தோட்டங்கள் 2 அமைப்புகளும் சேர்ந்து இளையர்கள் செயல்படுத்தக்கூடிய பல திட்டங்களை அறிமுகம் செய்யவிருக்கின்றன.

மூத்தோருக்கு இளையர்கள் கைகொடுப்பதும் திட்டத்தில் அடங்கும். 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்