Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மோசடிக்காரர்களிடம் YouTrip கணக்கைக் கொடுத்த சந்தேகத்தில் 38 பேர் கைது

வாசிப்புநேரம் -
மோசடிக்காரர்களிடம் YouTrip கணக்கை விற்ற அல்லது வாடகைக்குவிட்ட சந்தேகத்தில் 38 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

பதிலுக்கு அவர்கள் பணம் பெற்றதாக நம்பப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் (செப்டம்பர், அக்டோபர்) மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

YouTrip மூலம் உருவாக்கப்பட்ட போலியான PayNow QR குறியீடுகள் மூலம் பணத்தை இழந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

மின் வணிக மோசடி, நண்பர் ஆள்மாறாட்ட மோசடி, வேலை மோசடி உட்படப் பல்வேறு மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் சிக்கியதாகக் காவல்துறை கூறியது.

55 வயதுப் பெண் காதல் மோசடியில் சுமார் 300,000 வெள்ளி இழந்தது விசாரணையில் தெரிய வந்தது.

15 முதல் 52 வயது வரையுள்ள 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

அக்டோபர் 28 முதல் நேற்று (31 அக்டோபர்) வரை நடத்தப்பட்ட 4 நாள் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

மேலும் 9 பேரிடம் விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்