சிங்கப்பூர் exclusive
இரண்டு மடங்கு கூடுதல் மாணவர்களுடன் நடந்தேறிய NUSTLS யுத்தம் 2026
படம்: சுதேஷ்னி தனராஜ்
This audio is generated by an AI tool.
'யுத்தம் 2026' போட்டியின் இறுதிச்சுற்று இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு 'விவேகம்' என்ற கருப்பொருளில் 'யுத்தம்' நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
சென்ற ஆண்டைவிட இரண்டு மடங்கு கூடுதல் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
போட்டியின் முதல் சுற்று ஏப்ரல் 5ஆம் தேதி நடந்தது.
போட்டியில் மொத்தம் 2 பிரிவுகள் உள்ளன.
முதல் பிரிவு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கானது.
இரண்டாம் பிரிவு உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கானது.
கூடுதலான மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்தில் உயர்கல்வி நிலையங்களுக்கான பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது.
தொடக்கக்கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் உயர்கல்வி நிலையங்களுக்கான பிரிவில் போட்டியிட்டனர்.
உயர்நிலைப் பள்ளிகள், உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்றனர்.
அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 குழுக்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றன.
"தமிழ் இலக்கியம், தமிழ் தொடர்பான கேள்விகளை மட்டும் கேட்காமல் போட்டியை சுவாரசியமானதாக்கத் திரைப்படங்கள், இசை தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டன. அப்படிச் செய்வதால் மாணவர்கள் போட்டியைப் பார்த்து பயப்படாமல் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார் 'யுத்தம்' ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த லக்ஷனா.