Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"செயற்கை நுண்ணறிவு மூலம் விண்வெளித்துறையில் மாற்றங்கள், புதுமைகள் அவசியம்"

வாசிப்புநேரம் -
"செயற்கை நுண்ணறிவு மூலம் விண்வெளித்துறையில் மாற்றங்கள், புதுமைகள் அவசியம்"
படம்: MINDEF
விண்வெளித்துறையில் மாற்றங்களையும் புதுமைகளையும் கொண்டுவர செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது அவசியம் என்று தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) கூறியுள்ளார்.

மாறிவரும் போர்முறைக்கு ஈடுகொடுத்துச் செயல்பட செயற்கை நுண்ணறிவு சிங்கப்பூர் ஆகாயப்படைக்கு உதவக்கூடும் என்று அவர் சொன்னார்.

விண்வெளித் தொழில்நுட்ப, பொறியியல் மாநாட்டில் திரு ஸாக்கி பேசினார்.

அண்மையில் ரஷ்ய - உக்ரேன் போர், மத்திய கிழக்குப் பூசல் முதலியவற்றில் ஆளில்லா வானூர்திகள், அதிவேக ஆயுதங்கள் போன்றவை அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் திரு ஸாக்கி சொன்னார்.

செயற்கை நுண்ணறிவு அந்த அபாயங்களைச் சமாளிக்க உதவும் என்றார் அவர்.

தேசியச் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் 2.0வின் கீழ், விண்வெளித்துறையை மேம்படுத்த மின்னிலக்கக் கட்டமைப்பு, திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பாகப் பயன்படுத்துவது முதலியவற்றில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என்றார் திரு ஸாக்கி.

தொடர்ந்து புதுமைகளைக் கண்டறிந்து, செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் முதலீடு செய்து ஒத்துழைப்பை மேம்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்