டென்னிஸ்: 4வது சுற்றுக்கு தகுதிபெறும் ஆண்டி முர்ரே
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையரின் 4வது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார், பிரிட்டனின் ஆண்டி முர்ரே (Andy Murray). 3வது சுற்றில், அவர் இத்தாலியின் Andreas Seppi-ஐச் சந்தித்தார்.
4வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள ஆண்டி முர்ரே.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையரின் 4வது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார், பிரிட்டனின் ஆண்டி முர்ரே (Andy Murray). 3வது சுற்றில், அவர் இத்தாலியின் Andreas Seppi-ஐச் சந்தித்தார். அந்த ஆட்டத்தின் செட் விவரம்: 6 - 2, 6 - 2, 1 - 6, 6 - 1.
மற்றோர் ஆட்டத்தில், செக் (Czech) குடியரசின் Tomas Berdych, ஸ்பெயினின் Pablo Andujar-ஐத் தோற்கடித்து, 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆட்டத்தின் செட் விவரம்: 4 - 6, 6 - 0, 6 - 3, 7 - 6.
உலகத் தரவரிசையில் 2ம் நிலையில் இருக்கும் சுவிட்சர்லந்தின் Roger Federer, ஆஸ்திரேலியாவின் Samuel Groth-ஐ வெற்றிகண்டு, 4ம் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார். ஆட்டத்தன் செட் விவரம்: 6 - 4, 6 - 4, 6 - 7, 6 - 2.