சென்னை விமான நிலையம் : தனியார் மயப்படுத்த எதிர்ப்பு
சென்னை விமான நிலையத்தை தனியார் மயப்படுத்துவதை எதிர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்திய விமான நிலைய ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டிருந்த ஆர்பாட்டத்தின்போது கருப்பு கோடி ஏந்தி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
சென்னை விமான நிலையம்
தமிழ்நாடு, இந்தியா: சென்னை விமான நிலையத்தை தனியார் மயப்படுத்துவதை எதிர்lத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்திய விமான நிலைய ஊழியர் சங்கத்தினர் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின்போது கருப்பு கோடி ஏந்தி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
விமான நிலையத்தை ஆய்வு செய்ய தனியார் நிறுவன பிரதிநிதிகள் வரவிருந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது..ஏற்கனவே தனியார் மயமாக்கப்பட்ட டில்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்கள் இழப்பில இயங்கி வருவதாக சி.ஐ.ஜி அறிக்கை தெரிவித்திருக்கிறது. இதற்கு பின்னரும் சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு ஒரு பொழுதும் விடமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்..
தற்போது சென்னை விமான நிலையம் லாபத்தில் இயங்கி வருவதாகவும் இதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை கொண்டு தான் சேலம், பாண்டிச்சேரி, மங்களூரு, திருப்பதி உள்ளிட்ட விமானநிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்கள் 5,000 கோடி செலவில் உலகத்தத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இழப்பில் இயங்கி வருகிற சிறிய விமான நிலையங்களை தனியார் மயமாக்காமல் லாபத்தில் இயங்கு வருகின்ற சென்னை போன்ற விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.