டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஃபெடரர், ஜோக்கோவிச்
இவ்வாண்டின் விம்பிள்டன் ஆண்கள் இறுதி டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரரும் (Roger Federer), நோவாக் ஜோக்கோவிச்சும் (Novak Djokovic) சந்திக்கவிருக்கின்றனர். அந்தப் போட்டி நாளை நடைபெறும்.
ரோஜர் ஃபெடரர்
இவ்வாண்டின் விம்பிள்டன் ஆண்கள் இறுதி டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரரும் (Roger Federer), நோவாக் ஜோக்கோவிச்சும் (Novak Djokovic) சந்திக்கவிருக்கின்றனர். அந்தப் போட்டி நாளை நடைபெறும்.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் இருவரும் வெற்றி கண்டனர். 33 வயது ரோஜர் ஃபெடரர் 7 -5, 7 -5 , 6 -4 எனும் ஆட்டக் கணக்கில் ஏண்டி முர்ரேயை வெற்றி கண்டார்.
நோவாக் ஜோக்கோவிச், பிரான்சின் ரிச்சர்ட் கெஸ்கேயை (Richard Gasquet) 7-6, 6-4, 6-4 எனும் ஆட்டக்கணக்கில் வெற்றி கண்டார்.