திரிபோலியிலுள்ள தென் கொரியத் தூதரகம் தாக்கப்பட்டது
லிப்யத் தலைநகர் திரிபோலியில் (Tripoli) உள்ள தென் கொரியத் தூதரகத்தை அடையாளம் காணப்படாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

திரிபோலியிலுள்ள தென் கொரியத் தூதரகம்
லிப்யத் தலைநகர் திரிபோலியில் (Tripoli) உள்ள தென் கொரியத் தூதரகத்தை அடையாளம் காணப்படாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள் தாக்கியுள்ளனர். அந்த சம்பவத்தில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
தூதரகத்தை கடந்து சென்ற வாகனத்தில் இருந்த அந்த அடையாளம் தெரியாத நபர்கள், தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச் ச்சூட்டு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தூதரகத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு அரசதந்திரிகள் உள்ளிட்ட மூன்று தென் கொரியர்கள் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.