டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் ஹிங்கிஸ், மிர்சா வெற்றி
விம்பிள்டனின் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் சானியா மிர்சா இணை விருதை வென்றிருக்கிறது.
சுவிட்சர்லந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இந்தியாவின் சானியா மிர்சா.
லண்டன், பிரிட்டன்: விம்பிள்டனின் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் சானியா மிர்சா இணை விருதை வென்றிருக்கிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த ஈகட்ரீனா மாக்கரோவா (Ekaterina Makarova) எலீனா வெஸ்னினா இணையை (Elena Vesnina) அவர்கள் சந்தித்தனர். செட் விவரம் 5 - 7, 7 - 6, 7 - 5.
சானியா மிர்சா, விம்பிள்டன் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் விளையாடி இருப்பது இதுவே முதல் முறை. Grand Slam இரட்டையர் விருதை வென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஒற்றையர் தரவரிசையில் முன்பு முதல் இடத்தில் இருந்த ஹிங்கிஸ், 1996ல் ஹெலினா சுகோவாவுடனும் (Helena Sukova) 1998ல் யானா நோவாட்னாவுடனும் (Jana Novotna) இணைந்து இரட்டையர் பிரிவில் வெற்றிபெற்றிருக்கிறார்.