மனித உரிமைகளை மதியுங்கள்: ‘போப்’ இலங்கையில் வலியுறுத்தல்
மனித உரிமைகளை மதித்து நேர்மையான வழியைப் பின்பற்றும்படி போப் மக்களிடம் போப் பிரான்சிஸ்vகேட்டுக்கொண்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு போப் ஒருவர் இலங்கைக்குச் செல்வது இதுவே முதல் முறை.
பண்டாரநாயக்கே அனைத்துலக விமான நிலையத்திற்கருகே போப் பிரான்சிஸ் அவர்களுக்கு நடத்தி வைக்கப்பட்ட வரவேற்பு விழா. ( படம்: AFP/ ISHARA S KODIKARA )
கொழும்பு, இலங்கை: இலங்கை சென்றிருக்கும் போப் பிரான்சிஸ் (Francis) மனித உரிமைகளை மதித்து நடக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார். பல ஆண்டு காலம் நீடித்த, இலங்கை உள்நாட்டுப் போரின் பாதிப்பு இன்னமும் மக்களிடையே காணப்படுகிறது. அதை விடுத்து நேர்மையான வழியைப் பின்பற்றும்படி போப் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு போப் ஒருவர் இலங்கைக்குச் செல்வது இதுவே முதல் முறை.
இன்று காலை இலங்கை சென்று சேர்ந்த அவருக்குப் புதிய அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனா, வரவேற்பளித்தார். இலங்கையின் போர்க்கால குற்றங்கள் குறித்தும், மனித உரிமை அத்துமீறல்கள் குறித்தும் ஆராய, தன்னிச்சையான விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகத் திரு சிறிசேன உறுதி கூறியிருந்தார். போப் தமது ஆசியப் பயணத்தில் அடுத்து, பிலிப்பீன்ஸ் செல்லவிருக்கிறார். அடுத்த திங்கட்கிழமை அவர் ஆசியப் பயணத்தை நிறைவுசெய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.