Skip to main content
தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறேன்: டெரில் டேவிட்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறேன்: டெரில் டேவிட்

ஆங் மோ கியோ குழுத் தொகுதியில் ம.செ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டெரில் டேவிட் தாம் தமிழ் கற்றுக்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

ஆங் மோ கியோ குழுத் தொகுதியில் ம.செ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டெரில் டேவிட் தாம் தமிழ் கற்றுக்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

சிறு வயதில் தம் வீட்டுச் சூழல் காரணமாக தமிழ் கற்கும் வாய்ப்பு தமக்கு இல்லாமல் போனதாக அவர் செய்தி மீடியாகார்ப் இணைய வாசலிடம் தெரிவித்தார். அதனால் தமிழ் கற்கும் முயற்சிகளை இனி மேற்கொள்ளப் போவதாக அவர் எங்களிடம் கூறினார்.

ஆங் மோ கியோ இந்திய அடித்தள அமைப்புகளுடன் சேர்ந்து  பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாகவும் திரு டெரில் டேவிட் தெரிவித்தார். இந்திய கலாசாரம், கலைகள் ஆகியவற்றைப் பேணுவதில் அக்கறைக்காட்டப் போவதாகவும் அவர்  சொன்னார்.

மீடியாகார்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் படைப்பாளராக சிறிது காலம் இருந்த அவர், ஊடகத்துறையில் தாம் பெற்ற அனுபவம், பலதரப்பட்ட மக்களிடையே கலந்துப் பழகும் அனுபவத்தை ஏற்படுத்தித் தந்துள்ளதாக செய்தி மீடியாகார்ப்பிடம் கூறினார்.

அது தமது அரசியல் வாழ்க்கையில் பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்