மத்திய கிழக்கிற்கு தற்காப்பு அமைச்சரை அனுப்பும் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தற்காப்பு அமைச்சர் அஷ்டன் கார்ட்டரை அடுத்த வாரம் மத்திய கிழக்கிற்கு அனுப்பவுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தற்காப்பு அமைச்சர் அஷ்டன் கார்ட்டரை அடுத்த வாரம் மத்திய கிழக்கிற்கு அனுப்பவுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டத்தினால் நட்பு நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள பாதுகாப்பு தொடர்பிலான கடப்பாடு குறையாது என்பதை மறுஉறுதிப்படுத்துவது திரு கார்ட்டரின் பணியாக இருக்கும். அது கடினமான ஒன்று எனக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
திரு கார்ட்டர் இஸ்ரேலுக்குச் செல்லவிருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. பிற நாடுகள் குறித்த விவரங்களை அது இன்னமும் வெளியிடவில்லை.அபுதாபியின் பட்டத்து இளவரசர், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் போன்றோரை அதிபர் ஒபாமா தொலைபேசி வழி தொடர்புகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.