Trumpயை சாடுகிறார் மலாலா
நோபெல் அமைதி பரிசு வென்ற பாகிஸ்தானிய மாணவியான மலாலா, முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் Donald Trumpஐ சாடியுள்ளார்.

படம்- todayonline
பர்மிங்ஹாம், பிரிட்டன்: நோபெல் அமைதி பரிசு வென்ற பாகிஸ்தானிய மாணவியான மலாலா, முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் Donald Trumpஐ சாடியுள்ளார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் பள்ளியில் நடந்த தாக்குதலின் விளைவாக உயிரிழந்த 134 மாணவர்களை நினைவுகூற பர்மிங்ஹாம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
வெறுப்பு மற்றும் வேற்றுமைகளைத் தூண்டக்கூடிய Trumpயின் கருத்துக்கள் தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக மலாலா கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மலாலாவின் தந்தை Ziauddin Yousafzaiம் Trumpயின் கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்தார். சில பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளால் ஒத்துமொத்த 11.6 பில்லியன் முஸ்லிம் மக்களையும் குறைகூறுவது நியாயமில்லை என்று அவர் கூறினார்.