ஊழல் மோசடிகளைச் சரிவரக் கையாள வேண்டும்: போப் பிரான்சிஸ்
பிலிப்பீன்ஸ் அரசாங்கம், ஊழல் மோசடிகளைச் சரிவரக் கையாள வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் (இ.ப) உடன் நிற்கும் பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்குவினொஸ், பிலிபின்ஸ் அதிபர் மளிகை. ( படம்: AFP/ Bullit Marquez)
மணிலா, பிலிப்பின்ஸ்: பிலிப்பீன்ஸ் அரசாங்கம், ஊழல் மோசடிகளைச் சரிவரக் கையாள வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏழை மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவர்களின் வறுமையைப் போக்குவதற்கு அது முக்கியம் என்றார் அவர். பிலிப்பீன்ஸில், மோசடிகளின் காரணமாக, சமுதாய சமமின்மை நிலவுவதாக போப் சொன்னார். நேற்றிரவு அங்கு சென்றுசேர்ந்த அவருக்கு, பிலிப்பீன்ஸ் அதிபர் பெனிங்னொ அக்கினோ (Benigno Akino)-வின் தலைமையில், மலாக்கெர்னாங் (Malakernang) அதிபர் மாளிகையில் அதிகாரபூர்வ வரவேற்புச் சடங்கு இடம்பெற்றது.
அதிபரைச் சந்தித்த பிறகு, பிலிப்பீன்ஸில் நேர்மையான, பரிவுமிக்கச் சமுதாயத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி, ஊழல் ஒழிப்பு ஆகிய உறுதிமொழிகளின் அடிப்படையில், 2010-ஆம் ஆண்டு, திரு. அக்கினோ பதவியேற்றார். வறுமை- நிலையலிருந்து நாட்டை மீட்டெடுக்கப்போவதாகவும் அவர் சூளுரைத்தார். ஊழல்- நிரம்பியிருந்த அமைப்புகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ஃபிலிப்பீன்ஸ் அதிபர் நடைமுறைப்படுத்தினார். ஊழல் குறைந்து காணப்படும் நாடுகளின் பட்டியலில், ஃபிலிப்பீன்ஸின் நிலையை முன்னேற்ற அது துணைபுரிந்தது. இருப்பினும் மத்திய, உள்ளூர் அரசாங்கங்களில் உயரதிகாரிகள், பொதுப் பணத்தைக் கையாடும் சம்பவங்கள் இன்னும் அதிகமாய் இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.