‘தனது தாயை அவமதித்தால் யார்தான் பொறுத்துக்கொள்வார்?’: போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையைத் தற்காத்துப் பேசியுள்ளார். இருப்பினும், மற்றவர்களின் சமயத்தை அவமதிப்பதன் வழி அவர்களைத் தூண்டுவது தவறு என்றும் அவர் சொன்னார்.
போப் பிரான்சிஸ் பிலிப்பின்ஸ் மக்களுக்கு கைகாட்டுகிறார். (படம்: AFP/ Johannes Eisele)
மணிலா, பிலிப்பின்ஸ்: போப் பிரான்சிஸ் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையைத் தற்காத்துப் பேசியுள்ளார். இருப்பினும், மற்றவர்களின் சமயத்தை அவமதிப்பதன் வழி அவர்களைத் தூண்டுவது தவறு என்றும் அவர் சொன்னார். ஒருவர் என்னதான் நண்பராக இருந்தாலும் தனது தாயை அவமதித்தால் யார்தான் பொறுத்துக்கொள்வார் என்றும் கேள்வி எழுப்பினார். அவ்வாறே மதமும் ஒருவருக்கு தாய் போன்றது என்றார்
போப் நேற்று பிலிப்பின்ஸ் சென்று சேர்நதார். Paris-இல் நடந்த தாக்குதல்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு போப் பிரான்சிஸ் தமது கருத்துக்களைக் கூறினார்.
பாரிஸ்ஸின் ‘சார்லி ஹெப்டொ’ சஞ்சிகை வெளியிட்ட கேளிக்கை சித்திரங்களைக் காரணமாகக் கொண்டு தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும் அந்த சஞ்சிகையின் உரிமை குறித்து உலக-அளவில் பலர் அதற்கு ஆதரவளித்துப் பேசியுள்ளனர். ஒரு வாரக் காலகட்டத்தில் பாரிஸ்ஸில் நடந்த தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடந்து அண்மையில் வெவ்வேறு சமயத் தலைவர்கள் சிலர் ஒன்றிணைந்து கூட்டறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அந்தத் தாக்குதல்கள்களை வன்மையாகக் கண்டித்த அவர்கள், ஊடகங்கள் வெவ்வேறு சமயங்களுக்கு மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.