உலகக் கிண்ணக் கிரிக்கெட்: ஐ.அ.சிற்றரசுகளை வென்ற ஸிம்பாப்வே
சுமார் 20-ஆண்டுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிக்குத் திரும்பிய ஐக்கிய அரபுச் சிற்றரசு, அந்த வெற்றியை எளிதில் அடைய அனுமதிக்கவில்லை.
ஸிம்பாப்வேயின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஐ.அ.சிற்றரசுகள் பந்து வீச்சாளர்
ஸிம்பாப்வேயும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் மோதிய ஆட்டத்தில் இன்று, ஸிம்பாப்வே, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், சுமார் 20-ஆண்டுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிக்குத் திரும்பிய ஐக்கிய அரபுச் சிற்றரசு, அந்த வெற்றியை எளிதில் அடைய அனுமதிக்கவில்லை. முதலில் பந்தடிக்கும் வாய்ப்பை எதிரணிக்குத் தந்தது ஸிம்பாப்வே. ஏழு விக்கெட் இழப்புக்கு, 285-என ஆட்டத்தை முடித்தது, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள். அடுத்துப் பந்தடிக்க வந்த சிம்பாப்வே 64-வது ஓட்டத்தில் முதல் விக்கெட்டையும், 72-ஆவது ஓட்டம் எடுத்த நிலையில் இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது. Sean Williams 76 ஓட்டம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியின் வெற்றிக்கும் அவரே காரணம். ஆட்ட நாயகன் விருது அவர்வசம்.
12 பந்துகளே எஞ்சியிருந்த நிலையில், ஆறு விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டம் எடுத்து வெற்றி கண்டது ஸிம்பாப்வே..