ஏமனை வசப்படுத்த சவுதி திட்டம் - ஹூத்தி கிளர்ச்சிக் குழு குற்றச்சாட்டு
சவுதி அரேபியா, ஏமனை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிடுவதாக, ஹூத்தி கிளர்ச்சிக் குழுத் தலைவர் அப்துல் மலீக் அல் ஹூத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சவுதி அரேபியா, ஏமனை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிடுவதாக, ஹூத்தி கிளர்ச்சிக் குழுத் தலைவர் அப்துல் மலீக் அல் ஹூத்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சவுதி அரேபியா வழிநடத்தும் கூட்டணி, மூன்று வாரத்துக்கும் மேலாகக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, ஏமனில் ஆகாயத் தாக்குதல்களை நடத்திவருகிறது. இருப்பினும், இணக்கம் காணும் மனப்பான்மையில் தான் இல்லை என்று அந்தக் கிளர்ச்சிக் குழு கூறுகிறது. இதற்கிடையே, ஏமனில் ஆகாயத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.