ஆம்ஸ்டர்டாம் - பாரிஸ் ரயிலில் துப்பாக்கிச்சூடு
ஆம்ஸ்டர்டாமிலிருந்து பாரிஸுக்குச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அமெரிக்கப் பயணிகள் 2 பேர், அவர்களின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
பிரான்ஸ்: ஆம்ஸ்டர்டாமிலிருந்து பாரிஸுக்குச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அமெரிக்கப் பயணிகள் 2 பேர், அவர்களின் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அவனை Arras ரயில் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மோரோக்கோ நாட்டைச் சேர்ந்த அவனுக்கு 26 வயதாகிறது என்று போலீசார் தெரிவித்தனர். BFM எனப்படும் பிரஞ்சு தொலைக்காட்சியில் பேசிய பிரஞ்சு உள்துறை அமைச்சர் அமெரிக்கப் பயணிகளைப் பாராட்டினார். தாக்குதல் நடத்தியவன் துப்பாக்கியும், கத்தியும் வைத்திருந்ததாகத் தேசிய ரயில் நிறுவனமான SNCF-யின் பேச்சாளர் தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று பெல்ஜியப் பிரதமர் Charles Michel வருணித்துள்ளார்.