லிபியா: கப்பல் மூழ்கி 40 பேர் பலி
லிபியாவின் கடற்பகுதிக்கு அருகே, குறைந்தது 40 ஆப்பிரிக்கக் குடியேறிகள் மூழ்கி மாண்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தாலியைச் சென்றடைந்தோர் அந்தத் தகவலை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் முகாமிடம் தெரிவித்தனர்.

கோப்புப் படம்.
ரோம், இத்தாலி: லிபியாவின் கடற்பகுதிக்கு அருகே, குறைந்தது 40 ஆப்பிரிக்கக் குடியேறிகள் மூழ்கி மாண்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தாலியைச் சென்றடைந்தோர் அந்தத் தகவலை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் முகாமிடம் தெரிவித்தனர்.
சென்ற வாரம் புதன்கிழமை சுமார் 35லிருந்து 40 பேர் கடலில் விழுந்து மாண்டதாக, உயிர் பிழைத்தோர் கூறினர். செனகல், மாலி, பெனின் (Senegal, Mali, Benin) போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்களில் அடங்குவர் எனத் தென் ஐரோப்பா வட்டாரத்தின் பேச்சாளர் Carlotta Sami தெரிவித்தார். Save the Children அறக்கொடை அமைப்பைச் சேர்ந்த குழு ஒன்று, உயிர்பிழைத்தோரிடம் பேட்டி கண்டது. மாண்டோரில் சுமார் 7 பிள்ளைகளும் அடங்குவர் என அப்போது தெரியவந்தது. அவர்களில் 15, 16 வயது இளையர்களும் இருந்ததாக நம்பப்படுகிறது.
திரிபோலி (Tripoli) கடற்பகுதியைத் தாண்டிய படகு சேதமானதாகக் கூறப்பட்டது. ஜெர்மனிக் கடற்படையின் கப்பல் அவர்களை மீட்டு, கரைக்குக் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.சுமார் 283 அகதிகளும் கள்ளக் குடியேறிகளும் அகஸ்டா (Augusta) துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.