Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தானில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

வடக்கு ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

வாசிப்புநேரம் -
ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தானில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

படம்- channelnewsasia

காபுல், ஆஃப்கானிஸ்தான்: வடக்கு ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

காபுல் மற்றும் இஸ்லாமாபாத்தில் நேற்று இரவு சுமார் 11:14 மணிக்கு கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன. புதுடில்லி வரை அதிர்வுகளை உணர முடிந்தது என்று அதிகாரிகள் கூறினர்.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசாங்கமும் ஆஃப்கானிஸ்தானின் Pakhtunkhwa மாநில அரசாங்கமும் உச்ச அபாய நிலையை அறிவித்தன. ஆனால் நிலநடுக்கத்தின் விளைவாக பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வரவில்லை.

ஆஃப்கானிஸ்தானின் படக்‌ஷான் மாநிலத் தலைநகர் ஃபெய்ஸாபாத்திற்கு 82 கிலோமீட்டர் தென்கிழக்கே 200 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையங்கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் துறை தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்