மெக்சிக்கோ - சுழற்காற்றால் 13 பலி
மெக்சிக்கோவின் வடக்கு நகரைச் சுழற்காற்று தாக்கியதில் குறைந்தது 13 பேர் மாண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 750 வீடுகள் சேதமாயின.

மெக்சிக்கோவில் ஏற்பட்ட சுழற்காற்றில் குறைந்ததது 13 பேர் பலியாகினர்.
மெக்சிக்கோவின் வடக்கு நகரைச் சுழற்காற்று தாக்கியதில் குறைந்தது 13 பேர் மாண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 750 வீடுகள் சேதமாயின.
கார்கள் புரண்டன. மரங்கள் சரிந்தன. மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்காற்று வீசியதால் அந்தப் பகுதியே தலைகீழானது. 15 ஆண்டுகளில் ஏற்பட்ட ஆகக் கடுமையான சூறாவளி அது என மெக்சிக்கோ வானிலை ஆய்வகம் கூறியது.
வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்காக அதிகாரிகள் தற்காலிகத் தங்குமிடங்களை அமைத்துள்ளனர். தற்போது இடிபாடுகளை அகற்றும் பணிகளும், போக்குவரத்துக்குக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் வேலைகளும் நடைபெற்றுவருகின்றன.