மக்களை ஒற்றுமையாக்கும் பொறுப்பு எனது: ஸ்ரீசேன
தலைநகர் கொழும்புவில் நேற்று இலங்கையின் 67வது சுதந்திர தினவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
இலங்கை சுதந்திர தின அணிவகுப்பு. படம்: AP
கொழும்பு, இலங்கை : தலைநகர் கொழும்புவில் நேற்று இலங்கையின் 67வது சுதந்திர தினவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
அவ்விழாவின்போது அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேன இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்குப் பகுதியினரும் இதர பகுதிகளில் வாழ்பவர்களும் மனதால் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததிலிருந்து மக்களை ஒன்றிணைக்கும் பணியை, முன்னாள் தலைவர்கள் செய்யத் தவறி விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார். எனவே இந்த பொறுப்பு தமக்கு உள்ளதாக திரு ஸ்ரீசேன கூறினார்.
பல்வேறு இன மக்களை, மனதளவில் இணையாமல் போனதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவது சரியன்று என கருத்துரைத்தார். நாட்டை முன்னேற்றப் பாதையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றார் திரு ஸ்ரீசேன.
{இலங்கை சுதந்திர அணிவகுப்பில் தேசிய போலிஸ் படை, பெண்கள் பிரிவு. படம்: AP/ Eranga Jayawardhana}