Skip to main content
ஐ.எஸ் புதிய மிரட்டல், மும்பை விமான நிலையத்தில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

ஐ.எஸ் புதிய மிரட்டல், மும்பை விமான நிலையத்தில்

மும்பையில் உள்ள அனனத்துலக விமான நிலையத்தில் உள்ள கழிவறையின் சுவரில் வரும் 10ம் தேதி ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தும் என்ற மிரட்டல் எழுதப்பட்டதை நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
ஐ.எஸ் புதிய மிரட்டல், மும்பை விமான நிலையத்தில்

சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையம்.

வெளியீடு : 08 Jan 2015 03:53PM புதுப்பிப்பு : 08 Jan 2015 04:16PM

மும்பை, மகராஷ்டிரா: மும்பையில் உள்ள அனனத்துலக விமான நிலையத்தில் உள்ள கழிவறையின் சுவரில் வரும் 10ம் தேதி ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தும் என்ற மிரட்டல் எழுதப்பட்டதை நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மிரட்டலை எழுதியவரின் அடையாளம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை மத்திய பாதுகாப்பு படையினர் பார்த்து வருகிறார்கள்.

அந்நிலையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கழிவறைகளை சுத்தம் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் விமானத்தை தாக்கப் போவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் விமான நிலைய சுவரில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது. சுவரில் எழுதப்பட்டது பற்றி மும்பை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ள 4 இந்திய வாலிபர்களும் மும்பை அருகே உள்ள தானேவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. மும்பையில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்