இந்தோனேசிய நிலச்சரிவு: மாண்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தோனேசிய நிலச்சரிவு: மாண்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேசிய நிலச்சரிவு: மாண்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டவர்களின் எண்ணிக்கை இருபதுக்கு உயர்ந்துள்ளது. எண்பதுக்கும் அதிகமானோரைக் காணவில்லை. சேற்றில் புதையுண்டவர்களைத் தேடி மீட்கும் பணியில் ஆயிரத்து இருநூற்றுக்கும் அதிகமானோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெய்த கனமழையின் காரணமாக, மத்திய ஜாவா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று முன்தினம், Banjarnegara வட்டாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, சுமார் 105 வீடுகள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கிய 420 பேர் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.