Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Spider-Man புத்தகத்தின் ஒரு பக்கம் $3.3 மில்லியன்

வாசிப்புநேரம் -
Spider-Man புத்தகத்தின் ஒரு பக்கம் $3.3 மில்லியன்

(படம்: Pixabay)

Spider-Man புத்தகத்தின் ஒரேயொரு பக்கம் மட்டும் சுமார் 3.3 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் 1984ஆம் ஆண்டு வெளியான அந்தப் புத்தகத்தின் 25ஆவது பக்கம் ஏலத்திற்கு விடப்பட்டது.

அப்படி அந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

Spider-Man கதாபாத்திரத்தின் சிறப்புமிக்கக் கறுப்பு ஆடை முதன்முறையாக அந்தப் பக்கத்தில்தான் அறிமுகம் கண்டது.

அதை மைக் ஸேக் (Mike Zeck) வரைந்ததாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

அந்தப் பக்கத்தை வாங்கியவர், விற்றவர் ஆகியோரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்பு 1974ஆம் ஆண்டில் வெளியான The Incredible Hulk புத்தகத்தின் ஒரு பக்கம் 657,250 டாலருக்கு விற்கப்பட்டது.

அந்தப் பக்கத்தில்தான் X-Men கதாபாத்திரமான Wolverine அறிமுகமானதாக BBC தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa