Skip to main content
"2026 உலகக் கிண்ணம் தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டி"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

"2026 உலகக் கிண்ணம் தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டி" - ரொனால்டோ

வாசிப்புநேரம் -
"2026 உலகக் கிண்ணம் தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டி" - ரொனால்டோ
(படம்: REUTERS/Stringer)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போர்ச்சுகலின் பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியே தாம் கலந்துகொள்ளும் கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமக்கு 41 வயதாகப் போவதை அவர் சுட்டினார்.

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் காற்பந்திலிருந்து ஓய்வுபெறப்போவதாகவும் அவர் கூறினார்.

2002ஆம் ஆண்டு முதல் பதின்ம வயதிலிருந்து அவர் காற்பந்துப் போட்டிகளில் விளையாடுகிறார்.

இதுவரை நாட்டுக்கும் குழுக்களுக்கும் சேர்த்துச் சுமார் 950 கோல்களை அவர் புகுத்தியுள்ளார்.

கூடிய விரைவில் ஓய்வுபெற்றுக் குடும்பத்துடன் நேரம் செலவிடப்போவதாக அவர் கூறினார்.

சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணியுடனான ஒப்பந்தத்தை அவர் 2027ஆம் ஆண்டு ஜூன் வரை நீட்டித்திருக்கிறார்.

காணொளி வழி அளித்த பேட்டியில் அவர் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்தார்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்