Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நுழைவுச்சீட்டுகளின் விலை அளவுக்கு அதிகமா?

வாசிப்புநேரம் -
2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபண்டினோ (Gianni Infantino) தற்காத்துப் பேசியுள்ளார்.

நுழைவுச்சீட்டுகளின் விலை அளவுக்கு அதிகமாய் உள்ளதாக ரசிகர்கள் பலரும் குறைகூறினர்.

பின்னர் சில நுழைவுச்சீட்டுகள் 60 டாலருக்கும் விற்கப்படும் என்று சம்மேளனம் தெரிவித்தது.

பெரும்பாலான ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டின் விலை சுமார் 180 டாலரில் தொடங்குகிறது.

கடந்த 2 வாரங்களில் நுழைவுச்சீட்டுகளுக்காக இதுவரை இல்லாத அளவு 150 மில்லியன் கோரிக்கைகள் வந்திருப்பதாய்த் திரு இன்ஃபண்டினோ கூறினார்.

ஆனால் சுமார் 7 மில்லியன் நுழைவுச்சீட்டுகளே விற்பனைக்குள்ளதை அவர் சுட்டினார்.

பெரும்பாலான கோரிக்கைகள் அமெரிக்காவிலிருந்து வந்தவை என்று திரு இன்ஃபண்டினோ சொன்னார்.

அடுத்தடுத்த நிலையில் ஜெர்மனியும் பிரிட்டனும் உள்ளன.

துபாயில் நடைபெற்ற உலக விளையாட்டு மாநாட்டில் பேசிய திரு இன்ஃபண்டினோ, நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் ஈட்டப்படும் வருவாய் உலகெங்கும் காற்பந்து விளையாட்டுக்கே செலவு செய்யப்படும் என்று கூறினார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்