Skip to main content
2027 ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஒத்திவைப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

2027 ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஒத்திவைப்பு

வாசிப்புநேரம் -
2027 ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஒத்திவைப்பு

(படம்: Fayez Nureldine / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

2027 AFC ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சவுதி அரேபியாவில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெறவிருந்தது.

அது அடுத்த ஆண்டு டிசம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வட்டாரத்தில் நிலவும் சூழல் அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏமனின் ஹௌதி கிளர்ச்சிக் குழு சவுதி அரேபியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.

அண்மை வாரங்களில் சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த பல விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தளவாடச் சிக்கலும் பயணத் தடங்கலும் நீடிப்பதைப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு சுட்டியது.

போட்டிக்கான புதிய தேதிகள் FIFA அமைப்பிடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் என்றும் அது சொன்னது.

சவுதி அரேபியாவின் ஜித்தா (Jeddah), ரியாத் (Riyadh), அல் கோபார் (Al Khobar) ஆகிய நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறும்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்