Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ரியல் மட்ரிட் ஆட்டக்காரர் வினிசியஸ் உருவ பொம்மையைத் தொங்கவிட்ட விவகாரம் - 4 பேர் கைது

வாசிப்புநேரம் -
ரியல் மட்ரிட் ஆட்டக்காரர் வினிசியஸ் உருவ பொம்மையைத் தொங்கவிட்ட விவகாரம் - 4 பேர் கைது

(படம்: AP Photo/Paul White)

ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டிலுள்ள (Madrid) நெடுஞ்சாலைப் பாலத்தில் ரியல் மட்ரிட் (Real Madrid) காற்பந்து அணி ஆட்டக்காரர் வினிசியஸ் ஜூனியரின் (Vinícius Júnior) உருவ பொம்மையைத் தொங்கவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 4 ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெலன்சியா (Valencia) அணிக்கு எதிரான ஸ்பானிய லீக் ஆட்டத்தின்போது அந்தப் பிரேசில் ஆட்டக்காரர் இனத்தின் அடிப்படையில் அவதூறுக்கு ஆளான சம்பவத்துக்கு 2 நாள் கழித்து அவர்கள் பிடிபட்டனர்.

அந்த உருவ பொம்மையுடன் "Madrid hates Real" (மட்ரிட் ரியாலை வெறுக்கிறது) என்ற வசனம் இருந்த பதாகையும் தொங்கவிடப்பட்டிருந்தது.

அதனைச் செய்தவர்கள் வினிசியஸுன் பெயர் எழுதப்பட்டிருந்த கறுப்பு நிற உருவ பொம்மையைப் பயன்படுத்தியிருந்தனர். அந்தப் பொம்மையின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது.

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்